பிரதமர் அலுவலகம்

துவாரகா செக்டார் 21ல் இருந்து ‘யஷோபூமி துவாரகா செக்டார் 25’ வரை விமானநிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவை விரிவாக்கத்தை பிரதமர் திறந்து வைத்தார்

Posted On: 17 SEP 2023 4:20PM by PIB Chennai

யஷோபூமி துவாரகா செக்டார் 25ல், துவாரகா செக்டார் 21ல் இருந்து புதிய மெட்ரோ நிலையம் யஷோபூமி துவாரகா செக்டர் 25 வரை தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். புதிய மெட்ரோ நிலையம் மூன்று சுரங்கப்பாதைகளைக் கொண்டிருக்கும் - 735மீ நீளமுள்ள சுரங்கப்பாதை நிலையத்தை கண்காட்சி அரங்குகள், மாநாட்டு மையம் மற்றும் மத்திய அரங்குடன் இணைக்கிறது; துவாரகா விரைவுச்சாலையின் குறுக்கே நுழைவதை/வெளியேறுவதை இணைக்கும் மற்றொன்று; மூன்றாவது, மெட்ரோ நிலையத்தை யஷோபூமியின் எதிர்கால கண்காட்சி அரங்குகளின் லாபியுடன் இணைக்கிறது.

தில்லி மெட்ரோ விமானநிலைய எக்ஸ்பிரஸ் பாதையில் மெட்ரோ ரயில்களின் செயல்பாட்டு வேகத்தை மணிக்கு 90 முதல் 120 கிமீ வேகத்தில் அதிகரிக்கும், இதனால் பயண நேரம் குறையும். புது தில்லியிலிருந்து யஷோபூமி துவாரகா செக்டார் 25 வரையிலான  பயணம் சுமார் 21 நிமிடங்கள் ஆகும் .

தௌலா குவான் மெட்ரோ நிலையத்திலிருந்து மெட்ரோ வழியாக யஷோபூமி துவாரகா செக்டார் 25 மெட்ரோ நிலையத்தை பிரதமர் வந்தடைந்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவு வருமாறு;

தில்லி மெட்ரோவில் அனைவரும் புன்னகை மயம்! யஷோபூமி மாநாட்டு மையத்தின் முதல் கட்டத்தை திறந்து வைப்பதற்காக துவாரகா பயணத்தின் போது பல்வேறு தரப்பு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்’’.

 பிரதமரின் சமூக ஊடக எக்ஸ்  பதிவு வருமாறு:

"துவாரகாவிற்கும், திரும்புவதற்கும் ஒரு மறக்கமுடியாத மெட்ரோ பயணம், வாழ்க்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அற்புதமான சக பயணிகளால் இன்னும் சிறப்பானதாக ஆக்கப்பட்டது."

************ 

AD/ANU/PKV/KRS



(Release ID: 1958240) Visitor Counter : 123