பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரகாஷ் புரப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 16 SEP 2023 1:27PM by PIB Chennai

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் பிரகாஷ் புரப்பை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் காலத்தால் அழியாத ஞானம் மற்றும் எல்லையற்ற இரக்கத்தின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது. தெய்வீகத்தில் ஊறிப்போன  கருத்துகள்  காலத்தையும் எல்லைகளையும் கடந்து, கோடிக்கணக்கான மக்களை அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதியின் பாதையை நோக்கி வழிநடத்துகின்றன. இது மனிதநேயத்தைத் தழுவவும், தன்னலமற்ற சேவையைப் போற்றவும், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நல்லிணக்கத்தைத் தேடவும் நம்மைத் தூண்டுகிறது. ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் பிரகாஷ் புராப்-க்கு எனது வாழ்த்துக்கள்’’.

***

ANU/AP/PKV/DL


(रिलीज़ आईडी: 1957965) आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam