வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தூய்மையே சேவை- 2023 இன்று தொடங்கியது
Posted On:
15 SEP 2023 3:51PM by PIB Chennai
'அந்தியோதயா சே சர்வோதயா' என்ற தத்துவத்திற்கு தூய்மை இந்தியா இயக்கம் ஓர் ஒளிரும் உதாரணமாகும். இது நமது நகரங்களின் விளிம்புநிலை மற்றும் நலிவடைந்த பிரிவுகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளது, நகர்ப்புற ஏழைகளை மேம்படுத்தவும், அவர்களுக்கு அதிகாரமளிக்கவும் செயல்பட்டுள்ளது என்று மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். தூய்மையே சேவை- 2023 தொடக்க விழாவில் அவர் இன்று உரையாற்றினார்.
தூய்மை இந்தியா தினத்திற்கு முன்னோட்டமாக, தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம், ஊரகம் ஆகியவை இணைந்து வருடாந்திர தூய்மையே சேவை இருவார இயக்கத்தை செப்டம்பர் 15 முதல் அக்டோபர் '23 வரை ஏற்பாடு செய்துள்ளன. இந்தியன் பொதுமக்கள் தூய்மை இயக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் பங்களிப்பை திரட்டுவது இந்த இருவார இயக்கத்தின் நோக்கமாகும்.
தூய்மையே சேவை - 2023- ஐ ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங், ஆகியோர் தொடங்கி வைத்தனர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு கௌஷல் கிஷோர், குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை செயலாளர் திருமதி வினி மகாஜன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலாளர் திரு மனோஜ் ஜோஷி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வின் போது தூய்மையே சேவை - 2023 குறித்த வீடியோ வெளியிடப்பட்டது. இது தவிர, தூய்மையே சேவை - 2023-ன் இலச்சினை, வலைத்தளம், போர்ட்டல் ஆகியவையும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. 'இந்தியன் ஸ்வச்தா லீக் (ஐஎஸ்எல்) 2.0', 'சஃபைமித்ரா சுரக்ஷா ஷிவீர்' ஆகியவற்றின் இலச்சினைகள், 'குடிமக்கள் போர்ட்டல்' ஆகியவையும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டன.
தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் தூய்மையே சேவை -2023 -ன் தொடக்கம் குறித்து பேசிய திரு ஹர்தீப் சிங் பூரி, தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவு மற்றும் 'தூய்மையே சேவை' 2023-ன் தொடக்கம் கொண்டாட்டத்தின் தருணம் ஆகும் என்றார். நமது நகரங்களைத் தூய்மையாக வைத்திருக்கும் நோக்கத்திற்கு நம்மை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டிய நேரம் ஆகும் என்று அவர் கூறினார். தூய்மையே சேவை இருவாரம் தொடங்கப்பட்டதன் மூலம், தூய்மைக்காக நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஒவ்வொரு நகரமும், கிராமமும், வார்டும் சுற்றுப்புறத் தூய்மைக்காக தன்னார்வ உழைப்பை வழங்க உறுதியளிக்கும் என்று திரு ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்தார். நமது நகரங்கள் குப்பையில் இருந்து விடுபடவும், முழுமையான தூய்மையை நனவாக்கவும் தனிநபர்கள் உறுதியேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2023 அக்டோபர் 2, அன்று தூய்மை இந்தியா தினத்தை முன்னிட்டு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஆகியவை 'தூய்மையே சேவை' இருவார நிகழ்வை 2023 செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை ஏற்பாடு செய்துள்ளன. மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து, தூய்மை இந்தியா திட்டத்தின் 9 ஆண்டு கொண்டாடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1957683
***
ANU/SM/SMB/AG/GK
(Release ID: 1957803)
Visitor Counter : 313
Read this release in:
Marathi
,
Khasi
,
English
,
Urdu
,
Hindi
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam