பிரதமர் அலுவலகம்
திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதி அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2023 6:13PM by PIB Chennai
தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது;
"தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் நடந்த சாலை விபத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi
***
ANU/AD/IR/KPG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1956443)
வருகையாளர் எண்ணிக்கை : 220
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam