பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி20 மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 10 SEP 2023 2:03PM by PIB Chennai

பிரேசிலுக்கு நமது ஆதரவை  உறுதிப்படுத்துகிறோம். அவர்களின் தலைமையின் போது, ஜி20 அமைப்பு, நம் பொதுவான நோக்கங்களை மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்று  நம்புகிறோம்.

பிரேசில் அதிபரும், எனது நண்பருமான திரு லூலா டா சில்வாவுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்படி அவரிடம் தலைமைத்துவத்தை ஒப்படைக்கிறேன்.

இந்த சந்தர்ப்பத்தில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அதிபர் திரு லூலாவை நான் அழைக்கிறேன்.

(அதிபர் திரு லூலாவின் கருத்துக்கள்)

மாண்புமிகு பெருமக்களே,

நவம்பர் மாதம் வரை ஜி20 தலைமையை இந்தியா வகிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ளன.

இந்த இரண்டு நாட்களில், நீங்கள் அனைவரும் பல விஷயங்களை முன்வைத்துள்ளீர்கள், ஆலோசனைகளை வழங்கியுள்ளீர்கள், பல முன்மொழிவுகளை முன்வைத்துள்ளீர்கள்.

இத்தகைய ஆலோசனைகளை மீண்டும் ஒருமுறை ஆராய்ந்து, அவற்றின் முன்னேற்றத்தை எவ்வாறு விரைவுபடுத்த முடியும் என்பதைப் பார்ப்பது நமது பொறுப்பு.

ஜி20 உச்சிமாநாட்டின் மற்றொரு காணொளி அமர்வை நவம்பர் இறுதியில் நடத்த நான் முன்மொழிகிறேன்.

அந்த அமர்வில், இந்த உச்சிமாநாட்டின்போது தீர்மானிக்கப்பட்ட விஷயங்களை நாம் மறுஆய்வு செய்யலாம்.

இவை அனைத்தின் விவரங்களையும் எங்கள் குழு உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும்.

இதில் நீங்கள் அனைவரும் இணைவீர்கள் என நம்புகிறேன்.

மாண்புமிகு பெருமக்களே,

இந்த வார்த்தைகளுடன் இந்த ஜி20 உச்சிமாநாட்டை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்கிறேன்.

ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலத்தை நோக்கிய பாதை இனிமையானதாக இருக்கட்டும்.

அதாவது உலகம் முழுவதும் நம்பிக்கையும், அமைதியும் நிலவட்டும்.

140 கோடி இந்தியர்களின் நல்வாழ்த்துகளுடன், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்புத்துறப்பு - இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

ANU/AP/BR/AG


(Release ID: 1956286) Visitor Counter : 141