விவசாயத்துறை அமைச்சகம்

ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு தில்லியில் இன்று தொடங்கியது

Posted On: 09 SEP 2023 5:06PM by PIB Chennai

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பூசாவில் உள்ள ..ஆர். வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில் இந்தியாவின் விவசாயத் திறனை ஜி 20 நாடுகளின் முதல் பெண்மணிகள் மற்றும் தலைவர்களின் மனைவியர் நேரடியாகக் கண்டுணர்ந்தனர். பிரபல சமையல் கலைஞர்கள் குணால் கபூர், அனஹிதா தோண்டி மற்றும் அஜய் சோப்ரா தலைமையிலான சிறுதானியங்களை மையமாகக் கொண்ட நேரடி சமையல் அமர்வு, இந்திய முன்னணி ஸ்டார்ட்அப்களின் அதிநவீன விவசாயத்  தொழில்நுட்பக் கண்காட்சி, இந்திய பெண் வேளாண் சாம்பியன்களுடனான கலந்துரையாடல், 'வேளாண் தெரு ' போன்ற பல கவர்ச்சிகரமான கூறுகள் இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ளன.

 

கண்காட்சிப் பகுதிக்குச் செல்வதற்குமுன் பிரமாண்டமான இரண்டு 'சிறுதானிய ரங்கோலிகள்' இடம்பெற்ற ரங்கோலிப் பகுதிக்குத் தம்பதிகள்சென்றனர். சிறுதானியங்கள் மற்றும் உள்ளூர் கலைப் பொருட்களைப் பயன்படுத்தி அழகான கலைப்படைப்புகள் தயாரிக்கப்பட்டன. இந்தியாவின் ஆழமாக வேரூன்றிய விவசாய பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் "அறுவடையின் நல்லிணக்கம்" என்ற கருப்பொருளை முதல் ரங்கோலி படம் பிடித்தது. இது இந்தியாவின் விவசாய வலிமையை வெளிப்படுத்தியது, விவசாயத்  திறனை மேம்படுத்துவதில் பெண்களின் முக்கிய பங்கை வலியுறுத்தியது. பெண்களின் பல்வேறு விவசாய பங்களிப்புகளை குறிக்கும் உள்நாட்டு பொம்மைகள், சிறுதானியங்கள், கிராமிய சுடுமண் பானைகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த வசீகரிக்கும் ரங்கோலி நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக மாறியது. இரண்டாவது ரங்கோலி  "உலகம் ஒரு குடும்பம்" என்ற  இந்தியாவின் கலாச்சார தத்துவத்தை எதிரொலித்ததுஉலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்தியது. ஒற்றுமை மற்றும் வாழ்வாதாரத்திற்கான இந்தியாவின் உலகளாவிய அர்ப்பணிப்பைக் கொண்டாடியதுவிவசாய நாடான இந்தியா, உலகளாவிய உணவுப்  பாதுகாப்பில் முக்கியப்  பங்கு வகிக்கிறது.

 

கண்காட்சிப் பகுதியில், 15 வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அடித்தள நிலையில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கும், விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கும் தங்கள் புதுமையான தொழில்நுட்பத்  தீர்வுகளைக் காட்சிப்படுத்தின. பருவநிலைகேற்ற  ஸ்மார்ட் விவசாயம், விவசாய மதிப்புத் தொடரில்  புதுமை, வேளாண் தளவாடங்கள் மற்றும் விநியோகத் தொடர்கள், நீடித்த நுகர்வுக்கான தர உத்தரவாதம் மற்றும் சிறுதானியங்கள்: நீடித்த ஆரோக்கியம், விவசாயத்தை வலுப்படுத்துதல் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. மேலும், நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் (எஃப்.பி.) பல்வேறு உறுப்பினர்கள் 'கூட்டு வேளாண்மை மூலம் கிராமப்புற வளத்தை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளுடன் இணைந்து நாடு தழுவிய அளவில் சந்தைப்படுத்தப்பட்ட பலவிதமான உணவுப் பொருட்களைக் காட்சிப்படுத்தினர்.

 

'நேரடி சமையல் அமர்வு' பல வகையான சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட சமையல் இன்பங்களைத் தந்தது. சர்வதேச சிறுதானியங்கள்  ஆண்டுக் கொண்டாட்டங்களுடன் இணைந்த இந்த நிகழ்வில் குணால் கபூர், அனஹிதா தோண்டி, அஜய் சோப்ரா ஆகிய மூன்று பிரபல சமையல் கலைஞர்கள் இருந்தனர், அவர்களுடன் ஐடிசி குழுமத்தைச் சேர்ந்த இரண்டு சமையல் வல்லுநர்கள், சமையல்காரர் குஷா மற்றும் சமையல்காரர் நிக்கிதா ஆகியோருடன் இணைந்து, ஐந்து சமையல்காரர்களும் சிறுதானியங்களில் சிறப்பு கவனம் செலுத்தி ஒரு 'முழுமையான உணவை' தயாரித்தனர். இந்த உணவில் சுவையூட்டிகள், சாலட்கள், இனிப்பு வகைகள் ஆகியவை அடங்கும்.

 

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (.சி..ஆர்) அமைத்த அரங்குகள் மூலம் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சாதனைகளைக்  கண்காட்சி எடுத்துக்காட்டியது. துல்லிய வேளாண்மை, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரமயமாக்கல் முன்னேற்றங்களில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் துறை வளர்ச்சியை வெளிப்படுத்தின. ஒவ்வொரு அரங்கிலும்  அரசின் ஆதரவுடன் குறிப்பிட்ட பயிர் முன்னேற்றங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சில முக்கிய அரங்குகள் பாசுமதி புரட்சியின் பயணம், லட்சக்கணக்கான கணக்கான பாசுமதி விவசாயிகளின் செழிப்பில் அதன் பங்கு, 5 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணி ஈட்டும் நிலை போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தின. மற்றொரு அரங்கு  இந்தியா "நறுமணப் பொருட்களின் பூமி" என்ற தகுதியை எடுத்துக்காட்டியது. இது இந்திய மசாலாப் பொருட்களின் பரந்த வகைகள்உலகளாவிய புகழ் மற்றும் எதிர்கால நோக்கத்தை வலியுறுத்தியது. இன்னொரு அரங்கு காளான்களின் ஊட்டச்சத்து, மருத்துவ முக்கியத்துவம், இந்தியாவில் அவற்றின்  பன்முகத்தன்மை, ஏற்றுமதிக்கான திறன் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கியது. கூடுதலாக, மதிப்புமிக்க விருந்தினர்கள் .சி..ஆரின் மனம் கவரும் பல காட்சிகளுடன், வாழைப்பழங்களைக் கொண்டுசெல்லுதல்,   சேமித்தல் மற்றும் பழுக்க வைக்கும் போது சுற்றுச்சூழல் நிலைமைகளின் நிகழ்நேர கண்காணிப்பை எளிதாக்கும் சென்சார் அடிப்படையிலான அமைப்பையும் பார்வையிட்டனர்.

 

'வேளாண் தெருஎன்பது அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கண்காட்சியின் மற்றொரு முக்கிய அங்கமாகும். இது இந்தியாவின் விவசாய பாரம்பரியத்தை ஈர்க்கும் பயணத்தையும் அதன் துடிப்பான கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய நுண்ணறிவையும் வழங்குகிறது. இங்கு விவசாய நடைமுறைகள் குறித்த விரிவான பார்வை முன்வைக்கப்பட்டிருந்தது. வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்தது. இந்தத் தெரு ஒன்பது அரங்குகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றும் கிராமிய அழகுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தனஇது ஜி 20 நாடுகளின் தலைவர்களின் மனைவியருக்கு அற்புதமானதொரு  சூழலை உருவாக்கியது. சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விவசாயத்தின் பல்வேறு அம்சங்களையும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் முன்முயற்சிகளையும் இது எடுத்துக்காட்டியது. மத்தியப் பிரதேசத்தின் திண்டோரியைச் சேர்ந்த இளம் பெண் விவசாயியான லஹ்ரி பாய், தனது இரண்டு அறைகள் கொண்ட குடிசையில் சுமார் 50 வகையான சிறுதானிய விதைகள் உட்பட 150 க்கும் மேற்பட்ட உள்நாட்டு விதை வகைகளைப் பாதுகாத்து இந்தியாவின் 'சிறுதானிய ராணி' என்ற பட்டத்தைப் பெற்றது சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

 

நிகழ்ச்சியின் நிறைவில், ஜி 20 நாயகர்கள் ஒரு கூடை வடிவத்தில் பாராட்டுச் சின்னத்தைப் பெற்றனர். இந்தியாவின் துடிப்பான கலாச்சாரம் மற்றும் கலைப் பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்தக் கூடையில் இடம்பெற்ற பொருட்கள் கவனமாக தேர்வு செய்யப்பட்டன. சத்தீஸ்கரின் சால் காடுகளில் இருந்து பெறப்பட்ட பட்டு மூலம் தயாரிக்கப்பட்ட கையால் நெய்யப்பட்ட ஆடை, ஹரப்பா நாகரிகத்தின் (கிமு 3300 முதல் கிமு 1300 வரை) புகழ்பெற்ற 'நடனமாடும் பெண்' கலைப்பொருளுக்குப் பயன்படுத்தப்பட்ட மறைந்துபோன பண்டைய முறையை நினைவூட்டும் வகையில் மெழுகு நுட்பத்தைப் பயன்படுத்தி  கையால் வடிவமைக்கப்பட்ட உலோக மணி, புராணக் காட்சிகளைக் கொண்ட செரியல் ஓவியம் ஆகியவை இதில் அடங்கும்.

 

சிறுதானிய விவசாயம் உட்பட விவசாயத் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த புரிதலை முதல் பெண்மணிகள் மற்றும் தலைவர்களின் வாழ்க்கைத் துணைவியருக்கு இந்தப் பயணம் வழங்கியது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தராகண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், அசாம் ஆகிய உற்பத்தி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 100 பெண் விவசாயிகளுடன் உரையாடியபோது, நாட்டில் வளர்ந்து வரும் சிறுதானிய மதிப்புத் தொடர் பற்றி முதல் பெண்மணிகளும் தலைவர்களின் வாழ்க்கைத் துணைவியரும் அறிந்து கொள்ள முடிந்தது. புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள்  சிறப்பு விருந்தினர்களுக்கு சிறுதானியங்கள் மற்றும் இந்திய உணவு வகைகளின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்ட  ஒரு குறிப்பிடத்தக்க விருந்தினை ஏற்பாடு செய்தனர். அதே நேரத்தில் ஸ்டார்ட் அப்கள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (எஃப்.பி.) தங்களின் அண்மைக்கால  தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி, கலந்துகொண்ட அனைவருக்கும் தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கின.

 

*********

 

(Release ID: 1955809)

ANU/SM/PKV/KRS



(Release ID: 1955868) Visitor Counter : 141