பிரதமர் அலுவலகம்
5 பேர் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
03 SEP 2023 10:11AM by PIB Chennai
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“5 பேர் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பையில் சாம்பியன்கள்!
அபார வெற்றி பெற்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இது நம் வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இந்த வெற்றியின் மூலம், அடுத்த ஆண்டு ஓமனில் நடைபெறும் 5 பேர் ஆசிய ஹாக்கி உலகக் கோப்பையிலும் நமது இடத்தை உறுதி செய்துள்ளோம்.
நம் வீரர்களின் மன உறுதியும், அர்ப்பணிப்பும் நமது நாட்டிற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.”
***
SM/ANU/RB/DL
(Release ID: 1954467)
Visitor Counter : 149
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam