பிரதமர் அலுவலகம்

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 02 SEP 2023 10:40AM by PIB Chennai

சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்  பிரதமர் கூறியிருப்பதாவது:

"சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்தினத்துக்கு ( @Tharman_s ) மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உத்திசார் கூட்டு செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உங்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்."

***

SM/ ANU/ PLM/DL(Release ID: 1954279) Visitor Counter : 131