ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறையின் (ஏபிபிஎஸ்) முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டு, ஊதியத்திற்கான பணம் செலுத்த என்ஏசிஎச் மற்றும் ஏபிபிஎஸ் கலப்பு வழி 2023 டிசம்பர் 31 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
Posted On:
30 AUG 2023 11:34AM by PIB Chennai
மத்திய அரசின் நலத்திட்டப் பயனாளி பல சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்கு எண்ணினை அடிக்கடி மாற்றுவதாலும், பயனாளி சரியான நேரத்தில் புதிய கணக்கு எண்ணினை சமர்ப்பிக்காததால், சம்பந்தப்பட்ட திட்ட அலுவலர் கணக்கு எண்ணினைப் புதுப்பிக்காததாலும், இலக்கு வங்கிக் கிளை மூலம் ஊதியம் செலுத்தும் பல பரிவர்த்தனைகள் (பழைய கணக்கு எண் காரணமாக) நிராகரிக்கப்படுவதாக மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்து, இதுபோன்ற நிராகரிப்புகளைத் தவிர்க்க ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறையில் (ஏபிபிஎஸ்) நேரடிப் பணப்பரிமாற்றம் (டிபிடி) மூலம் ஊதியத்தொகையை செலுத்துவது சிறந்த வழியாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகள் உரிய நேரத்தில் ஊதியம் பெற முடியும்.
திட்ட தரவுத்தளத்தில் ஆதார் புதுப்பிக்கப்பட்டவுடன், இருப்பிட மாற்றம் அல்லது வங்கிக் கணக்கு எண் மாற்றம் காரணமாக பயனாளி கணக்கு எண்களை புதுப்பிக்க வேண்டியதில்லை. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்கு எண்ணுக்கு பணம் மாற்றப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் அரிதான பின்னணியில் பயனாளியின் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால், பயனாளி கணக்கைத் தேர்ந்தெடுக்க விருப்பம் உள்ளது.
நேரடிப் பயன் பரிமாற்றத்திற்கு ஆதார் பயன்படுத்தப்படும் இடங்களில் 99.55% அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதம் வெற்றிகரமாக உள்ளது என்பதை இந்திய தேசிய பணப்பரிமாற்றக் கழகத்தின் (என்பிசிஐ) தரவு காட்டுகிறது. கணக்கு அடிப்படையிலான கட்டணத்தைப் பொறுத்தவரை அத்தகைய வெற்றி சுமார் 98% ஆகும்.
ஏ.பி.பி.எஸ், உண்மையான பயனாளிகளுக்கு உரிய தொகையைப் பெற உதவுகிறது; போலிப் பயனாளிகளைக் களையெடுப்பதன் மூலம் ஊழலைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆதார் வசதியுடன் கூடிய பணம் செலுத்தப்படவில்லை. இந்தத் திட்டம் ஆதார் அடிப்படையிலான கட்டண இணைப்பு முறையைத் தேர்வு செய்துள்ளது. ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறையின் (ஏபிபிஎஸ்) முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டு, ஊதியப் பணப்பட்டுவாடாவின் கலப்பு வழி (என்ஏசிஎச் மற்றும் ஏபிபிஎஸ் வழி) 2023 டிசம்பர் 31 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு வரும் பயனாளி ஆதார் எண்ணினை வழங்குமாறு கோர வேண்டும், ஆனால் இந்த அடிப்படையில் வேலை மறுக்கப்படக்கூடாது என்று அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு பயனாளி வேலை கோரவில்லை என்றால், அத்தகைய சந்தர்ப்பங்களில் ஏ.பி.பி.எஸ்-சுக்கான தகுதி பற்றிய அவரது நிலை வேலைக்கான தேவையை பாதிக்காது. தொழிலாளர் ஏ.பி.பி.எஸ் -க்கு தகுதியற்றவர் என்ற காரணத்தின் அடிப்படையில் வேலை அட்டைகளை நீக்க முடியாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 14.33 கோடி பயனாளிகளில், 13.97 கோடி பேருக்கு ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 13.34 கோடி ஆதார் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர்களில் 81.89% பேர் இப்போது ஏ.பி.பி.எஸ்-க்கு தகுதி பெற்றுள்ளனர். 2023 ஜூலை மாதத்தில், சுமார் 88.51% ஊதியம் ஏ.பி.பி.எஸ் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
***
ANU/AD/SMB/AG/KRS
(Release ID: 1953458)
Visitor Counter : 260
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada