பிரதமர் அலுவலகம்
வாரணாசியில் நடைபெற்ற ஜி-20 கலாச்சார அமைச்சர்கள் மாநாட்டின் பிரதிநிதிகளை கௌரவிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட 'சுர் வசுதா'வுக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
27 AUG 2023 6:23PM by PIB Chennai
வாரணாசியில் நடைபெற்ற ஜி 20 கலாச்சார அமைச்சர்கள் மாநாட்டின் பிரதிநிதிகளை கௌரவிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட 'சுர் வசுதா' என்ற இசை அற்புதத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.
இசைக்குழுவில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் அழைப்பாளர் நாடுகள் உள்பட 29 நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் இருந்தனர். பல்வேறு இசைக்கருவிகள் மற்றும் பாடகர்கள் தங்கள் தாய்மொழிகளில் பாடி இசை மரபுகளைக் கொண்டாடியுள்ளனர். குழுவின் வசீகரிக்கும் மெட்டுக்கள் "வசுதைவ குடும்பகம்" - உலகம் ஒரு குடும்பம் என்ற உணர்வை பிரதிபலித்தன.
மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டியின் சமூக ஊடக எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து, பிரதமர் கூறியிருப்பதாவது;
"வசுதைவ குடும்பகத்தின் செய்தியை முன்னிலைப்படுத்த ஒரு சிறந்த வழி, அதுவும் நித்திய நகரமான காசியிலிருந்து!"
----
ANU/AD/PKV/DL
(रिलीज़ आईडी: 1952759)
आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam