பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய ஆடவர் 4×400 மீட்டர் ரிலே குழுவினரின் அற்புதமான பணியை பிரதமர் பாராட்டினார்


இந்த அணி உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

प्रविष्टि तिथि: 27 AUG 2023 6:21PM by PIB Chennai

உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய ஆண்கள் 4×400 மீட்டர் ரிலே குழு உறுப்பினர்களான அனஸ், அமோஜ், ராஜேஷ் ரமேஷ் மற்றும் முகமது அஜ்மல் ஆகியோரின் முயற்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

"உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நம்பமுடியாத குழுப்பணி!

ஆடவருக்கான 4×400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் அனஸ், அமோஜ், ராஜேஷ் ரமேஷ் மற்றும் முகமது அஜ்மல் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய ஆசிய சாதனையைப் படைத்தனர்.

இது இந்திய தடகளத்திற்கு உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்பான ஒரு வெற்றிகரமான மறுபிரவேசமாக நினைவுகூரப்படும்.

 

----

ANU/AD/DL


(रिलीज़ आईडी: 1952723) आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam