நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெங்காய இருப்பு 3 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 5 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்வு

Posted On: 20 AUG 2023 2:56PM by PIB Chennai

நாளை (திங்கட்கிழமை) முதல் என்.சி.சி.எஃப் வெங்காயத்தை சில்லறை விலையில் கிலோ ரூ. 25 க்கு விற்கும்

 

3.00 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் இலக்கை எட்டிய பின்னர், முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு வெங்காயத்தின் இருப்பு அளவை 5.00 லட்சம் மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக, நுகர்வோர் விவகாரத் துறை என்.சி.சி.எஃப் மற்றும் நாஃபெட் ஆகியவற்றுக்கு தலா 1.00 லட்சம் டன் கொள்முதல் செய்து கூடுதல் கொள்முதல் இலக்கை அடையவும், கொள்முதல் செய்யப்பட்ட இருப்புகளை முக்கிய நுகர்வு மையங்களில் அளவீடு செய்து விநியோகிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

சில்லறை விலைகள் அகில இந்திய சராசரியை விட அதிகமாகவும் அல்லது முந்தைய மாதத்தை விட கணிசமாக அதிகமாகவும் இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முக்கிய சந்தைகளை குறிவைத்து, இருப்பிலிருந்து வெங்காயத்தை அகற்றுவது தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இருப்பிலிருந்து சுமார் 1,400 மெட்ரிக் டன் வெங்காயம் இலக்கு சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கிடைப்பதை அதிகரிக்க தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

முக்கிய சந்தைகளில் வெளியிடுவதைத் தவிர, இருப்பிலிருந்து வெங்காயம் சில்லறை நுகர்வோருக்கு ஒரு கிலோ ரூ. 25/- என்ற மானிய விலையில் நாளை முதல் அதாவது 21 ஆகஸ்ட் 2023 திங்கள் முதல் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் கிடைக்கிறது. வெங்காயத்தின் சில்லறை விற்பனை வரும் நாட்களில் பிற முகவர்கள் மற்றும் மின் வணிக தளங்களை ஈடுபடுத்துவதன் மூலம் பொருத்தமான முறையில் அதிகரிக்கப்படும்.

 வெங்காயம் கொள்முதல் செய்தல், இருப்புகளை இலக்கு வைத்தல் மற்றும் ஏற்றுமதி வரி விதித்தல் போன்ற அரசு எடுத்துள்ள பன்முக நடவடிக்கைகள் வெங்காய விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் பயனளிக்கும், அதே நேரத்தில் நுகர்வோருக்கு மலிவு விலையில் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும்.

**********

 

ANU/SM/PKV/KRS


(Release ID: 1950607) Visitor Counter : 163