பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் மேதகு டாக்டர் சையத் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி பேசினார்

இருதரப்பு மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்கிடையே தங்கள் சந்திப்பை அவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்

Posted On: 18 AUG 2023 6:12PM by PIB Chennai

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் மேதகு டாக்டர் சையத் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று தொலைபேசியில் உரையாடினார். இருதரப்பு மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

 

இந்தியா- ஈரான் இடையேயான உறவு, நெருக்கமான வரலாறு மற்றும் நாகரிகத் தொடர்புகளையும் மக்களுக்கிடையேயான வலுவான மற்றும் மக்கள் தொடர்புகளையும் கொண்டுள்ளன என்று  பிரதமர் கூறினார்.

இணைப்பு மையமா சபஹார் துறைமுகத்தின் முழு திறனையும் உணர்வது உட்பட இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

 

இரு தலைவர்களும் பிரிக்ஸ் விரிவாக்கம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர், தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கிடையே தங்கள் சந்திப்பை இவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

***

ANU/SM/SMB/RS/KRS



(Release ID: 1950232) Visitor Counter : 140