பிரதமர் அலுவலகம்
பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு
இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிலையான மற்றும் இருகட்சிகளையும் சேர்ந்தவர்களின் ஆதரவை பிரதமர் பாராட்டினார்
ஜூன் மாதம் தமது வரலாற்று சிறப்புமிக்க அரசு முறைப் பயணத்தை நினைவு கூர்ந்த பிரதமர், அப்போது இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
பிரதமரும் அமெரிக்க தூதுக்குழுவும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை மற்றும் மக்களுக்கு இடையிலான வலுவான உறவுகளை எடுத்துக்காட்டியுள்ளனர்
Posted On:
16 AUG 2023 7:43PM by PIB Chennai
பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழு இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தது.
இந்தக் குழுவில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்தியா காகசின் இணைத் தலைவர் பிரதிநிதி ரோ கன்னா, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இந்தியா காகசின் இணைத் தலைவர் பிரதிநிதி மைக் வால்ட்ஸ், பிரதிநிதி எட் கேஸ், பிரதிநிதி காட் கமாக், பிரதிநிதி டெபோரா ரோஸ், பிரதிநிதி ஜாஸ்மின் க்ரோக்கெட், பிரதிநிதி ரிச் மெக்கார்மிக் மற்றும் பிரதிநிதி திரு. தானேதர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தூதுக்குழுவினரை இந்தியாவிற்கு வரவேற்ற பிரதமர், இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிலையான மற்றும் இருகட்சி ஆதரவுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அதிபர் பைடனின் அழைப்பின் பேரில் ஜூன் மாதம் தமது வரலாற்று சிறப்புமிக்க அரசு முறைப் பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அப்போது இரண்டாவது முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றதைச் சுட்டிக்காட்டினார்.
இந்திய-அமெரிக்க விரிவான உலகளாவிய உத்திபூர்வ கூட்டாண்மை பகிரப்பட்ட ஜனநாயக மதிப்புகள், சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை மற்றும் மக்களுக்கு இடையிலான வலுவான உறவுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை பிரதமரும் அமெரிக்க தூதுக்குழுவும் எடுத்துரைத்தனர்.
**********
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1949655
(Release ID: 1949716)
Visitor Counter : 150
Read this release in:
Kannada
,
English
,
Manipuri
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam