மத்திய அமைச்சரவை
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார ஆபரேட்டர்களின் பரஸ்பர அங்கீகார ஏற்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
16 AUG 2023 4:30PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், வருவாய்த் துறை ஆகியவற்றுக்கும், ஆஸ்திரேலிய அரசின் ஆஸ்திரேலிய எல்லைப் படையை உள்ளடக்கிய உள்துறை அமைச்சகத்திற்கும் இடையே பரஸ்பர அங்கீகார ஏற்பாட்டில் கையெழுத்திடுவதற்கும், ஏற்பு அளிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நம்பகமான ஏற்றுமதியாளர்களுக்கு பரஸ்பர நன்மைகளை வழங்குவதை இந்த ஏற்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் உலகளாவிய நிலையில் வர்த்தகத்திற்கு அதிக வசதிகளை வழங்கும். இந்த ஏற்பாடு ஆஸ்திரேலியாவுக்கான நமது ஏற்றுமதியாளர்களுக்குப் பயனளிக்கும், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு மேம்படும்.
இரு நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளால் கையொப்பமிடப்பட்ட தேதியிலிருந்து இந்த ஏற்பாடு நடைமுறைக்கு வரும். முன்மொழியப்பட்ட பரஸ்பர அங்கீகார ஏற்பாட்டின் நகல் இரு நாடுகளின் சுங்க நிர்வாகங்களின் ஒப்புதலுடன் இறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1949425
***
AD/SMB/AG/GK
(Release ID: 1949589)
Visitor Counter : 140
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam