பிரதமர் அலுவலகம்

சீனாவில் நடைபெற்ற 31-வது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்களின் சிறந்த செயல் திறனுக்குப் பிரதமர் பாராட்டு

Posted On: 08 AUG 2023 8:37PM by PIB Chennai

31-வது உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் 11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர்களின் செயல்திறனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 1959-ம் ஆண்டில் இந்த விளையாட்டுப் போட்டி தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறன் இது என்று கூறியுள்ள பிரதமர், இந்த வெற்றிக்காக விளையாட்டு வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாகவது

 

"ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் சிறந்த விளையாட்டு செயல்திறன் இது!

31-வது உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீரர்கள் 26 பதக்கங்களுடன் திரும்பியுள்ளனர்! 11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என இதற்கு முன் இல்லாத சிறந்த செயல்திறன் இதில் உள்ளது.

நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள மற்றும் இனி உருவாகும் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் இந்த விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பெரிய மரியாதை செலுத்துகிறேன்.

 

1959-ம் ஆண்டு இந்த உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டது முதல் இந்தியா அதிகபட்சமாக மொத்தம் 18 பதக்கங்களையே வென்றுள்ளது. இந்த ஆண்டு 26 பதக்கங்கள் கிடைத்திருப்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. மிகச் சிறப்பு வாய்ந்த, மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

நமது விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இந்த சிறப்பான செயல்திறன் ஒரு சான்றாகும். இந்த வெற்றிக்காக விளையாட்டு வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களை நான் பாராட்டுகிறேன். அடுத்து அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ReleaseID : 1946861

***  

ANU/SM/PLM/KRS



(Release ID: 1946880) Visitor Counter : 123