பிரதமர் அலுவலகம்

வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023, புதிய இந்தியாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது என்பதை பிரதமர் உறுதி செய்துள்ளார்

Posted On: 08 AUG 2023 1:49PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ், வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023, குறித்து எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்து அது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். 

புதிய இந்தியாவில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த மசோதா எவ்வாறு அமைந்துள்ளது, காடுகளுக்கு வெளியே பசுமைப் பகுதிகளை மேம்படுத்துவதற்கும் காடுகளை அதிக உற்பத்தித்திறன் மிக்கதாக மாற்றுவதற்கும் இந்த மசோதா எவ்வாறு அடித்தளம் அமைக்கிறது என்பவை குறித்துத் தமது கட்டுரையில் அமைச்சர் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில் கூறியிருப்பதாவது:

"மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வன (பாதுகாப்பு) திருத்த மசோதா - 2023 பற்றி எழுதியுள்ளார்... இதை அனைவரும் படிக்க வேண்டும்!"

***



(Release ID: 1946767) Visitor Counter : 156