பிரதமர் அலுவலகம்
லோக்மான்ய திலகரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
லோக்மான்ய திலக் தேசிய விருதை பிரதமர் ஏற்றுக்கொள்ளவிருக்கிறார்
प्रविष्टि तिथि:
01 AUG 2023 8:29AM by PIB Chennai
லோக்மான்ய திலகரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இன்று புனேவில் லோக்மான்ய திலக் தேசிய விருதை பிரதமர் திரு மோடி ஏற்றுக் கொள்வார். மேலும், புனேவில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“லோக்மான்ய திலகரின் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நான் இன்று புனே செல்கிறேன், அங்கு, லோக்மான்ய திலக் தேசிய விருதைப் பெற்றுக் கொள்வேன். நமது வரலாற்றின் இத்தகைய மகத்தான ஆளுமையின் பணியுடன் நெருங்கிய தொடர்புடைய இந்த விருது எனக்கு வழங்கப்படுவதை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.”
“முக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளேன்.”
***
ANU/BR/AG
(रिलीज़ आईडी: 1944555)
आगंतुक पटल : 158
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam