பிரதமர் அலுவலகம்
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUL 2023 4:32PM by PIB Chennai
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்..
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்: "தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோன சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்:பிரதமர்
***
AP/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1943955)
வருகையாளர் எண்ணிக்கை : 250
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam