தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்திய-சீனா எல்லையில் உள்ள எல்லைக் கிராமங்களில் அகில இந்திய வானொலி சேவையை மேம்படுத்த இலவச டிஷ்களை அரசு வழங்கவுள்ளது: திரு.அனுராக் தாக்கூர்

Posted On: 13 JUL 2023 4:23PM by PIB Chennai

இந்திய-சீனா எல்லையில் உள்ள தொலைதூர கிராமப் பகுதிகளில் இலவச தூர்தர்ஷன் டிடிஎச் இணைப்புகளை வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சிறந்த மொபைல் இணைப்பு வழங்குவது விரைவில் உறுதி செய்யப்படும் என்றும், இந்த பகுதிகளில் தொலைத்தொடர்பை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். லே பகுதியிலிருந்து 211 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லடாக்கின் கர்சோக் கிராம மக்களுடன் உரையாடிய போது அமைச்சர் அனுராக் தாக்கூர் இவ்வாறு கூறினார்.

எல்லையோர கிராமங்களின் மேம்பாட்டிற்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறிய அவர், உள்ளூர் கிராம மக்களுக்கு சிறந்த டிஜிட்டல் இணைப்பு, சாலை இணைப்பு, சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், விளையாட்டு உட்கட்டமைப்பை  மேம்படுத்தப்படுத்துதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

சூரியசக்தி மின்சாரம், குடிநீர், செயற்கை ஏரி, சுற்றுலா மானியம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் அமைச்சர் அனுராக் விவாதித்தார். மேலும் எல்லைப் பாதுகாப்பு, சாலை மேம்பாடு, மொபைல் டவர்கள், வனவிலங்கு இடையூறுகள் குறித்தும் அவர் விவாதித்தார்.

 

தொடர் முயற்சி மற்றும் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் வகையில் கிராமங்களை உருவாக்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1939206

***

AD/CR/GK



(Release ID: 1939292) Visitor Counter : 158