பிரதமர் அலுவலகம்

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு

இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்

உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை தூதரக ரீதியில் தீர்வுகாணுமாறு பிரதமர் மீண்டும் வலியுறுத்தல்

Posted On: 30 JUN 2023 7:02PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மேன்மைக்குரிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இன்று தொலைபேசியில்  தொடர்புகொண்டு பேசினார்.

இருதலைவர்களும் இருதரப்பு பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்ததுடன் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்த தங்கள் கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டில் ஏற்பட்டு வரும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார். அப்போது உக்ரைனில் தற்போதுள்ள சூழல் குறித்து கேட்டறிந்த பிரதமர், இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை மற்றும் தூதரக ரீதியில் அமைதியான முறையில் தீர்வுகாணுமாறு மீண்டும் வலியுறுத்தினார்.  

இந்தியா-ரஷ்யா இடையிலான சிறப்பு மற்றும் முக்கியத்துவமிக்க நட்புறவு உத்திகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வது எனவும், தொடர்ந்து நட்புறவில் இருப்பது எனவும் இருதலைவர்களும்  இசைவு தெரிவித்தனர்.

***

AP/ES/AG/KRS

(Release ID: 1936486)

 



(Release ID: 1936521) Visitor Counter : 144