புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2023 ஜூன் 29ம் தேதி புள்ளியியல் தினம் கொண்டாடப்பட்டது
Posted On:
29 JUN 2023 3:05PM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் துறைகளில், மறைந்த பேராசிரியர் பிரசண்ட சந்திர மஹாலனோபிஸின் சீரிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூன் 29 ஆண்டுதோறும் புள்ளியியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் புள்ளியியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு , புதுதில்லியில் உள்ள ஸ்கோப் மாநாட்டு மையத்தில் புள்ளியியல் தின சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் திரு ராவ் இந்திரஜித் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து உரையாற்றினார். தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் ராஜீவ் லக்ஷ்மண் கராந்திகர், புள்ளியியல் துறை செயலாளரும் தலைமைப் புள்ளியியல் தலைவருமான டாக்டர் ஜி.பி. சமந்தா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
2023ம் ஆண்டு கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நிலையான வளர்ச்சி இலக்குகள்- தேசிய காரணி கட்டமைப்பு முன்னேற்ற அறிக்கை- 2023 வெளியிடப்பட்டது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் துணைத்தலைமை இயக்குநர் டாக்டர் அஷுதோஷ் ஓஜா புள்ளியியல் தின மையப் பொருள் பற்றி உரையாற்றினார். இந்தியாவுக்கான ஐநா ஒருங்கிணைப்பாளர் திரு ஷோம்பி ஷார்ப், நித்தி ஆயோகின் மூத்த ஆலோசகர் டாக்டர் யோகேஷ் சூரி, நித்தி ஆயோகின் இயக்குநர் திரு ராஜேஷ் குப்தா ஆகியோரும் இதே பொருளில் உரையாற்றினர்.
-----
SMB/ES/KPG
(Release ID: 1936250)
Visitor Counter : 167