நிதி அமைச்சகம்
மாநிலங்களின் மூலதனச் செலவுக்கு ஊக்கமளிக்கும் மூலதன முதலீடு 2023-24-க்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவித்திட்டத்தின் கீழ் மூலதன முதலீட்டுக்காக 16 மாநிலங்களுக்கு ரூ. 56,415 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
26 JUN 2023 4:00PM by PIB Chennai
நடப்பு நிதியாண்டில் 16 மாநிலங்களுக்கு ரூ.56415 கோடி மதிப்பிலான மூலதன முதலீட்டு பரிந்துரைக்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் தமிழ்நாட்டிற்கு ரூ. 4079 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி, பாசனம், தண்ணீர் விநியோகம், மின்சாரம், சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலதன முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களின் மூலதன செலவுக்கு ஊக்கமளிக்கும் மூலதன முதலீடு 2023-24-க்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவித்திட்டம் 2023-24-ம்ஆண்டின் மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு சிறப்பு உதவியாக 50 ஆண்டுகளுக்கு கடனில்லாமல், ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படுகிறது.
AP/IR/RS/KRS
***
(Release ID: 1935430)
Visitor Counter : 237
Read this release in:
Telugu
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Kannada