பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 23 JUN 2023 7:33AM by PIB Chennai

அமெரிக்க நாடாளுமன்ற அவைத்தலைவர் மாண்புமிகு திரு கெவின் மெக்கார்த்தி, செனட் சபையின் பெரும்பான்மை தலைவர் மாண்புமிகு திரு சார்லஸ் ஷூமர், குடியரசுக் கட்சியின் தலைவர் மாண்புமிகு திரு மிட்ச் மெக்கானல் மற்றும் ஜனநாயக அவைத் தலைவர் மாண்புமிகு திரு ஹக்கீம் ஜெஃப்ரிஸ் ஆகியோரின் அழைப்பின் பேரில் ஜூன் 22, 2023 அன்று அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

அமெரிக்க துணை அதிபர் மாண்புமிகு திருமிகு கமலா ஹாரிஸும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கேப்பிட்டால் ஹில்லுக்கு வருகை தந்த பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையான வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து அவைத்தலைவர் திரு கெவின் மெக்கார்த்தி மற்றும் இதர உறுப்பினர்களுடன் பிரதமர் தனித்தனியே கலந்துரையாடினார்.

இந்திய-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரு கட்சிகளின் நீண்ட கால மற்றும் வலுவான ஆதரவிற்கு தமது உரையின்போது பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள வேகமான முன்னேற்றம் குறித்துப் பேசிய பிரதமர், இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வையையும் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை சுட்டிக்காட்டிய அவர், உலகிற்கு இந்தியா அளிக்கும் ஏராளமான வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.

 

பிரதமரை கௌரவிக்கும் வகையில் அவைத் தலைவர் திரு மெக்கார்த்தி, வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தபோது, நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்.

***

(Release ID: 1934651)

AD/BR/RR


(रिलीज़ आईडी: 1934702) आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , Marathi , Marathi , हिन्दी , Nepali , Assamese , Bengali , Manipuri , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam