பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நியூயார்க்கில் நடைபெற்ற 9- வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 21 JUN 2023 11:30PM by PIB Chennai

ஐநா பொதுச் சபையின் தலைவர் மரியாதைக்குரிய திரு கசாபா கொரோசி அவர்களே

ஐநா  துணைப் பொதுச் செயலாளர்  மரியாதைக்குரிய அமினா முகமது அவர்களே,

நியூயார்க்  நகர மேயர் மரியாதைக்குரிய எரிக் ஆடம்ஸ் அவர்களே,

மற்றும் உலகம்  முழுவதிலுமிருந்து ந்துள்ள அன்பு  நண்பர்களே,

ணக்கம்!

நண்பர்களே,

இந்த இனிய காலை வேளையில், ஐக்கிய நாடுகள் சபையில் நாம் கூடியிருக்கிறோம்.

இது முழு மனிதகுலத்தின் சந்திப்பு புள்ளி ஆகும்.!  இந்த அற்புதமான நியூயார்க் நகரத்தில் நாம் கூடியிருக்கிறோம்! உங்களில் பலர் நீண்ட தூரத்திலிருந்து வந்துள்ளீர்கள் எனக்கு தெரியும். உங்களில் பெரும்பாலோர்  சூரிய உதயத்திற்கு  முன்பே எழுந்து, இங்கு  வர முயற்சி  செய்துள்ளீர்கள்.

உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், இங்கு வந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி!

நண்பர்களே,

ஏறக்குறைய ஒவ்வொரு தேசிய இனமும் இன்று இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.   மேலும், நம் அனைவரையும் ஒன்றிணைக்க அற்புதமான காரணமாக  யோகா அமைந்துள்ளது.!

யோகா என்றால்  ஒருங்கிணைத்தல் என்பதே பொருள்.   எனவே, நீங்கள் ஒன்றிணைவது யோகாவின் மற்றொரு வகையான வெளிப்பாடாகும். எனக்கு நினைவிருக்கிறதுசுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு,  இங்குள்ள ஐநாவில்,  ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவது குறித்து முன்மொழியும் பெருமை எனக்குக் கிடைத்தது.

அந்த யோசனையை உலகம் முழுவதும் ஒன்றுசேர்ந்து ஆதரித்ததைப்  பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது. துணிச்சலான ஐநா அமைதிப்படை வீரர்களுக்கு நான் மரியாதை செலுத்தினேன். அவர்களின் நினைவாக ஐநா-வில் புதிய நினைவிடம் கட்டப்பட வேண்டும் என்று 2015-ல் கோரிக்கை  விடுத்திருந்தேன்.

கடந்த வாரம், முழு உலகமும் இந்தியாவுடன் கைகோர்த்து அதை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர உதவியுள்ளது. மிகப்பெரிய படைப் பங்களிப்பை வழங்கும் தேசமாக இந்தியா உள்ளது.   வீரர்களுக்கு நினைவிடம் அமைக்கும் உன்னத நோக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் மிகுந்த நன்றி தெரிவிக்கிறோம்.

இந்த 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதற்கான இந்தியாவின் முன்மொழிவுக்கு கடந்த ஆண்டில்,  முழு உலகமும் ஆதரவு அளித்தது. சிறுதானியம் ஒரு அருமையான உணவு. அவை முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கும் சிறந்ததாக உள்ளன.  இன்று, முழு உலகமும் மீண்டும் யோகாவிற்காக ஒன்று கூடுவதைப் பார்ப்பது அற்புதமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.!

நண்பர்களே,

யோகா இந்தியாவில் தோன்றியது. மேலும், இது மிகவும் பழமையான பாரம்பரியமாகும். ஆனால் எல்லா பழங்கால இந்திய மரபுகளைப் போலவே, இதுவும் சிறப்பும், ஆற்றலும் வாய்ந்தது. யோகா என்பதற்கு பதிப்புரிமையோ, காப்புரிமையோ இல்லை.  இதற்கு உரிமைத்தொகை கொடுக்கவும் தேவையில்லை. யோகா என்பது உங்கள் வயது, பாலினம் மற்றும் உடற்பயிற்சி நிலைக்கு ஏற்றதாகும். யோகா எளிமையானது.  நீங்கள் அதை வீட்டிலோ அல்லது வேலையில் இருக்கும் போதோ  அல்லது போக்குவரத்தில் இருக்கும்போது கூட செய்யலாம்.

யோகா நெகிழ்ச்சித்தன்மை கொண்டது.  நீங்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ பயிற்சி செய்யலாம். ஆசிரியரிடமிருந்து அதைக் கற்றுக்கொள்ளலாம் அல்லது சுயமாகவும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.  யோகா அனைவரையும் ஒருங்கிணைக்கிறது.  இது அனைவருக்கும், அனைத்து இனத்தினருக்கும், அனைத்து நம்பிக்கைகளுக்கும் மற்றும் அனைத்து கலாச்சாரங்களுக்கும் பொதுவானது. யோகா உண்மையிலேயே உலகளாவிய கலையாகும்.

நண்பர்களே,

நாம் யோகா செய்யும் போது, ​​நாம் உடல் ரீதியாகவும், மனதளவிலும் அமைதியாகவும், திருப்தியாகவும் உணர்கிறோம்.  ஆனால் அது ஒரு விரிப்பில் பயிற்சிகளைச் செய்வது மட்டுமல்ல. யோகா ஒரு வாழ்க்கை முறையாகும்.  அது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையாகும். எண்ணங்கள் மற்றும் செயல்களில் கவனத்துடன் இருக்க அது ஒரு வழிமுறை. தன்னுடனும், மற்றவர்களுடனும்,  இயற்கையுடனும் இணக்கமாக வாழ்வதற்கான ஒரு வழி யோகாவாகும். இந்த யோகாவின் பல்வேறு பரிமாணங்களை அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதில் உங்களில் பலர் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில், இதுதான் சிறந்த வழி.

நண்பர்களே,

நீங்கள் அனைவரும் யோகாப் பயிற்சியை தொடங்க ஆர்வமாக உள்ளீர்கள் என்று எனக்குத் தெரியும்! நானும் அப்படித்தான் உள்ளேன்.  இன்று  இங்கு நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்த ஐக்கிய நாடுகள் சபைக்கு நன்றி கூற நான் விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சியை வெற்றியடையச் செய்ய அனைத்து உதவிகளும் ஆதரவும் வழங்கிய நியூயார்க் நகர மேயர் மற்றும் இந்த நகரத்திற்கு நான் நன்றி செலுத்துகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று இங்கு வந்திருப்பதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி நன்றி கூற விரும்புகிறேன். யோகாவின் சக்தியை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நமக்கும், மற்றவர்களுக்கும் அன்பை ஏற்படுத்தும் அம்சமாகவும் பயன்படுத்துவோம்.

நட்பு பாலங்களைக் கட்டமைக்கவும், அமைதியான உலகத்தை ஏற்படுத்தவும், தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கவும் யோகாவின் சக்தியைப் பயன்படுத்துவோம். "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற இலக்கை நனவாக்க நாம் ஒன்றிணைவோம். நான் எனது ஒரு விருப்பத்துடன் இந்த உரையை நிறைவு செய்கிறேன்:

எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்போம்: அனைவரும் ஆரோக்கியமாக இருப்போம்!

நன்றி!

மிக்க நன்றி!

***

LK/PLM/RJ/KRS


(Release ID: 1934565) Visitor Counter : 135