உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
டிஜி யாத்ரா செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்தது
Posted On:
22 JUN 2023 2:55PM by PIB Chennai
டிஜி யாத்ரா செயலியை தங்களது மொபைல் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்த பயணிகளின் எண்ணிக்கை இந்த வாரம் ஒரு மில்லியனைக் கடந்தது. 2022 டிசம்பர் 1 அன்று விமானப் போக்குவரத்து மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு ஜோதிர்ஆதித்ய சிந்தியா தொடங்கிவைத்த இந்த செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1.746 மில்லியனாக உள்ளது.
டிஜி யாத்ரா செயலி டிசம்பர் 2022-ல் புதுதில்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய மூன்று விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 2023-ல் விஜயவாடா, கொல்கத்தா, ஹைதராபாத், புனே ஆகிய விமான நிலையங்களில் டிஜி யாத்ரா செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
டிஜி யாத்ரா செயலி என்பது விமானப்போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்த முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமானத்தில் ஏறுவதற்கான ஒரு முறையாகும். இதன் மூலம் விமான நிலையங்களில் பயணிகள் தடையின்றி, எளிதாக சென்று விமானங்களில் பயணிக்க முடியும். இதனால், பல்வேறு முனையங்களில் பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை நேரடி சரிபார்த்தலுக்காக பயணிகள் அணுகுவது களையப்படும்.
அனைத்து பயணிகளின் தரவுகளும் பயணிகளின் ஸ்மார்ட் ஃபோன்களில் சேமிக்கப்பட்டு பயணிக்கும் நாள் அன்று விமான நிலையத்தில் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பயணிகளின் டிஜி யாத்ரா மூலம் அடையாளம் தேவைப்படும் போது மட்டும் இந்த தரவை பகிர்ந்துகொள்ள முடியும்.
வாரணாசி விமான நிலையத்தில் அதிக சதவீதப் பயணிகள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். அதற்கு அடுத்த படியாக விஜயவாடா விமான நிலையத்தில் டிஜி யாத்ரா செயலியை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
===========
AP/IR/RS/KRS
(Release ID: 1934528)
Visitor Counter : 199