குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சர்வதேச யோகா தினம் 2023-ல் குடியரசுத் துணைத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
Posted On:
19 JUN 2023 4:15PM by PIB Chennai
ஜபல்பூரில் வரும் 21-ம் தேதி நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். கூட்டத்தில் உரையாற்றும் அவர், பின்னர் அங்கு நடைபெறும் வெகுஜன யோகா செயல்முறை விளக்கத்திற்கு தலைமை தாங்குகிறார். சர்வதேச யோகா தினம் 2023 இன் குறிக்கோள் "வசுதைவ குடும்பகத்திற்கான யோகா" என்பதாகும்.
கடந்த 2014-ம் ஆண்டு ஒரு தீர்மானத்தின் மூலம் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா அங்கீகரித்து 9 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச யோகா தினம் 2023 இன் உலகளாவிய கொண்டாட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் சர்வதேச யோகா தினம் 2023 இன் தேசிய கொண்டாட்டம் குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் தலைமையில் நடைபெறும்.
இதற்காக திரு தன்கர் ஜூன் 20 ஆம் தேதி ஜபல்பூரை அடைகிறார், அங்கு அவர் தமது துணைவியார் திருமதி (டாக்டர்) சுதேஷ் தன்கருடன் பிரார்த்தனை செய்து குவாரிகாட்டில் நர்மதா ஆரத்தியில் கலந்து கொள்கிறார்.
மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மற்றும் பிற பிரமுகர்கள் சர்வதேச யோகா தினம் 2023 நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
***
(Release ID: 1933448)
Visitor Counter : 216