பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரதமர் அழைப்பு

Posted On: 17 JUN 2023 8:29PM by PIB Chennai

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தின் நேரு யுவ கேந்திராவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் 'தெருமுனை நாடகம்' நடத்தியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

அருணாச்சல பிரதேச முதல்வர் திரு பெமா காண்டுவின் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர் கூறியிருப்பதாவது:

"பல்வேறு விஷயங்களில் விழிப்புணர்வை பரப்புவதில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முன்முயற்சிகள் பாராட்டுக்குரியவை.   இந்தியா முழுவதும் அதிகமான மக்கள் தண்ணீர் சேமிப்பு  செய்தியை மேலும் முன்னெடுப்பதற்கு இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்."

***

AD/PKV/DL


(Release ID: 1933210) Visitor Counter : 117