பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐஎஸ்எஸ்எப் ஜூனியர் உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 10 JUN 2023 4:26PM by PIB Chennai

ஐஎஸ்எஸ்எப் ஜூனியர் உலகக் கோப்பை 2023 இல் இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களின் திறமைக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில், 15 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"நமது துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளனர்! ஐஎஸ்எஸ்எப் ஜூனியர் உலகக் கோப்பை 2023 இல் இந்தியா 15 பதக்கங்களுடன்,பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு வெற்றியும் நமது  இளம் விளையாட்டு வீரர்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் எழுச்சிக்கு ஒரு சான்றாகும். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்’’.

***

SM/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1931342) வருகையாளர் எண்ணிக்கை : 173