பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவுவிலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
07 JUN 2023 2:56PM by PIB Chennai
2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலையில் கீழ்கண்டவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (ரூ.1 குவிண்டாலுக்கு):
பயிர்கள்
|
எம்எஸ்பி 2014-15
|
எம்எஸ்பி 2022-23
|
எம்எஸ்பி 2023-24
|
உற்பத்தி
விலை*
கரீஃப் பருவம்
2023-24
|
2022-23-ஆம் ஆண்டு எம்எஸ்பி-யைவிட கூடுதல்
|
உற்பத்தி விலை லாபம்- சதவீதத்தில்
|
நெல்- பொது
|
1360
|
2040
|
2183
|
1455
|
143
|
50
|
முதல்தர வகை நெல்
|
1400
|
2060
|
2203
|
-
|
143
|
-
|
ஒட்டுரக ஜோவார்
|
1530
|
2970
|
3180
|
2120
|
210
|
50
|
ஜோவார்- மல்தாண்டி
|
1550
|
2990
|
3225
|
-
|
235
|
-
|
கம்பு (பஜ்ரா)
|
1250
|
2350
|
2500
|
1371
|
150
|
82
|
கேழ்வரகு
|
1550
|
3578
|
3846
|
2564
|
268
|
50
|
மக்காச்சோளம்
|
1310
|
1962
|
2090
|
1394
|
128
|
50
|
துவரை
|
4350
|
6600
|
7000
|
4444
|
400
|
58
|
பச்சைப் பயறு
|
4600
|
7755
|
8558
|
5705
|
803
|
50
|
உளுந்து
|
4350
|
6600
|
6950
|
4592
|
350
|
51
|
நிலக்கடலை
|
4000
|
5850
|
6377
|
4251
|
527
|
50
|
சூரியகாந்தி விதை
|
3750
|
6400
|
6760
|
4505
|
360
|
50
|
சோயாபீன் (மஞ்சள்)
|
2560
|
4300
|
4600
|
3029
|
300
|
52
|
எள்
|
4600
|
7830
|
8635
|
5755
|
805
|
50
|
நைஜர்விதை
|
3600
|
7287
|
7734
|
5156
|
447
|
50
|
பருத்தி (நடுத்தர இழை)
|
3750
|
6080
|
6620
|
4411
|
540
|
50
|
பருத்தி (நீண்ட இழை)
|
4050
|
6380
|
7020
|
-
|
640
|
-
|
* உற்பத்தி விலை என்பது, விவசாய பணியாளர்களுக்கான செலவு, கால்நடைகள் மற்றும் இயந்திரங்களுக்கான செலவு, விதைகள், உரங்கள் மற்றும் நீர்ப்பாசன செலவுகள், பம்ப்செட் போன்றவற்றின் தேய்மானச் செலவுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
* முதல்தர வகை நெல், ஜோவார் – மல்தாண்டி, நீண்ட இழை பருத்தி ஆகியவற்றுக்கு உற்பத்தி விலை தனியாக கணக்கிடப்படவில்லை.
2018-19ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி விலையைவிட குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்குக்கு கூடுதலாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில், 2023-24-ஆம் ஆண்டுக்கான கரீஃப் சந்தைப்பருவ குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பஜ்ராவுக்கு 82 சதவீதமும், துவரைக்கு 58 சதவீதமும், சோயாபீனுக்கு 52 சதவீதமும், உளுந்துக்கு 51 சதவீதமும், விவசாயிகளுக்கு அதிகமாக கிடைக்கும் மற்ற பயிர்களுக்கு உற்பத்தி செலவைவிட குறைந்தபட்சம் 50 சதவீத அளவுக்கு விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக பருப்பு, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் போன்றவற்றின் சாகுபடியை அரசு ஊக்குவிப்பதுடன் அவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து வழங்கி வருகிறது. இது தவிர தேசிய விவசாயிகள் வளர்ச்சித்திட்டம் (ஆர் கே வி ஒய்), தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.
2022-23-ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 330.5 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய 2021-22-ஆம் ஆண்டைவிட 14.9 மில்லியன் டன் அதிகமாகும். அத்துடன் கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிக உற்பத்தி இதுவாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930440
**
AD/PLM/KPG/GK
(Release ID: 1930494)
Visitor Counter : 2346
Read this release in:
Kannada
,
Telugu
,
Malayalam
,
Odia
,
Khasi
,
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati