பிரதமர் அலுவலகம்
ஜூன் 3ஆம் தேதி கோவாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
இது நாட்டின் 19வது வந்தே பாரத் ரயிலாகும்
வந்தே பாரத் ரயில் மும்பை மற்றும் கோவா இடையிலான பயணத்தை ஏறக்குறைய ஏழரை மணி நேரத்தில் எட்டும்; தற்போதைய பாதையில் உள்ள அதிவேக ரயிலுடன் ஒப்பிடுகையில், ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்துகிறது
இந்த ரயில் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்குவதுடன், சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும்
प्रविष्टि तिथि:
02 JUN 2023 1:27PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, கோவாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை ஜூன் 3 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் மட்கான் ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
'மேக் இன் இந்தியா' மற்றும் தற்சார்பு இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து, அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில், மும்பை - கோவா வழித்தடத்தில் இணைப்பை மேம்படுத்தி, அப்பகுதி மக்களுக்கு வேகத்துடனும், வசதியுடனும் பயணிக்க வழிவகை செய்யும். இந்த ரயில் நாட்டில் இயக்கப்படும் 19-வது வந்தே பாரத் ரயிலாகும்.
மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் கோவாவின் மட்கான் ரயில் நிலையம் இடையே இந்த ரயில் இயக்கப்படும். இரண்டு இடங்களையும் இணைக்கும் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இது ஏறக்குறைய ஏழரை மணி நேரத்தில் பயண தூரத்தை அடையும். இந்த ரயில் ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில், உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இரு மாநிலங்களிலும் சுற்றுலாவை மேம்படுத்தும்.
***
AD/PKV/GK
(रिलीज़ आईडी: 1929430)
आगंतुक पटल : 222
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam