பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை அஸ்ஸாமில் மே 29-ம் தேதி பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

Posted On: 28 MAY 2023 5:35PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை மே 29-ம் தேதியன்று மதியம் 12 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும். கவுகாத்தியை நியூ ஜல்பைகுரியுடன் இணைப்பதில், தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இந்த ரயில் சுமார் ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும். வந்தே பாரத் ரயில் இந்தப் பயணத்தை 5 மணி 30 நிமிடங்களில் கடந்து செல்லும், அதே நேரத்தில் தற்போதைய அதிவேக ரயில் 6 மணிநேரம் 30 நிமிடங்களில் அதே பயணத்தை மேற்கொள்ளும்.

இதேபோல் புதிதாக மின்மயமாக்கப்பட்ட 182 கிமீ ரயில் பாதையைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதிக வேகத்தில் ஓடும் ரயில்களுடன் மாசு இல்லாத போக்குவரத்தை வழங்கவும், ரயில்களின் இயக்க நேரத்தை குறைக்கவும் இது உதவும். மின்சார இழுவையில் இயங்கும் ரயில்கள் மேகாலயாவிற்குள் நுழைவதற்கு இது கதவுகளைத் திறக்கும்.

 

அஸ்ஸாமில் உள்ள லும்டிங்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஇஎம்யு/எம்இஎம்யு   பணிமனைகளை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்தப் புதிய வசதி, இந்தப் பகுதியில் இயங்கும் டிஇஎம்யு பெட்டிகளைப் பராமரிப்பதற்கு உதவிகரமாக இருக்கும்

***

AD/CR/DL



(Release ID: 1927909) Visitor Counter : 226