பிரதமர் அலுவலகம்
மூன்றாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் மே 25 அன்று தொடங்கிவைக்கிறார்
21 விளையாட்டுகளில் நடைபெறும் இப்போட்டியில் 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4750-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்
இந்த விளையாட்டுப்போட்டியின் சின்னம் ஜித்து என பெயரிடப்பட்டுள்ளது. இது உத்தரப்பிரேதச மாநில அரசின் விலங்கான சதுப்பு மான் எனப்படும் பரசிங்காவை குறிக்கிறது
இந்த விளையாட்டுப் போட்டி மே 25-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது
Posted On:
24 MAY 2023 3:42PM by PIB Chennai
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டி 2022ஐ மே 25ம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்த அதிக கவனம் செலுத்துவதுடன், இளைஞர்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை ஆதரிக்க அரசால், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், நாட்டின் விளையாட்டு சூழலை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகவே, கேலோ இந்திய பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மூன்றாது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள், மே 25 முதல் ஜூன் 3ம் தேதி வரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது. வாரணாசி, கோரக்பூர், லக்னோ மற்றும் கௌதம புத்தா நகர் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. 21 விளையாட்டுகளில் நடைபெறும் இப்போட்டியில் 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4750-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். நிறைவு விழா, ஜூன் 3-ம் தேதி வாரணாசியில் நடைபெறுகிறது.
இந்த விளையாட்டுப்போட்டியின் சின்னம் ஜித்து என பெயரிடப்பட்டுள்ளது. இது உத்தரப்பிரேதச மாநில அரசின் விலங்கான சதுப்பு மான் எனப்படும் பரசிங்காவை குறிக்கிறது.
******
(Release ID: 1926899)
AP/PLM/RS/RR
(Release ID: 1926966)
Visitor Counter : 237
Read this release in:
Punjabi
,
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam