பிரதமர் அலுவலகம்
ஜி-7 உச்சிமாநாட்டின் 7-வது பணி அமர்வில் பிரதமரின் தொடக்க உரையின் தமிழாக்கம்
Posted On:
20 MAY 2023 5:08PM by PIB Chennai
மேன்மையானவர்களே,
வரலாற்றில் நாம் இன்று முக்கியமான திருப்புமுனையில் இருக்கிறோம். பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவை உலகின் முக்கிய பிரச்சனைகளாக இன்று காணப்படுகின்றன. பருவநிலை மாற்றம் போன்ற பெரிய சவால்களை எதிர்கொள்வதற்கு நாம் தொடர்ந்து விவாதிக்க வேண்டும்.
இந்திய நாகரீகத்தில் பூமிக்கு தாய் என்ற தகுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சவால்களுக்குத் தீர்வுகளைக் காண நாம் பூமித்தாயின் அழைப்பைக் கேட்க வேண்டும். நம்மையும், நம்முடைய நடத்தைகளையும் மாற்றிக் கொள்ளவேண்டும். அதன் முயற்சியாக இயற்கையுடன் இணைந்த வாழ்க்கைமுறை என்ற மிஷன் லைஃப் திட்டம், சர்வதேச சூரிய கூட்டமைப்பு, பேரிடர் மீட்பு உட்கட்டமைப்புக்கான கூட்டு, ஹைட்ரஜன் இயக்கம், உயிரி எரிபொருள் கூட்டமைப்பு போன்ற சர்வதேச தீர்வுகளை இந்தியா ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், சொட்டு நீருக்கு நிறைய விளைச்சல் என்ற இயக்கத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள விவசாயிகள் ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்து வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். 2070-ஆம் ஆண்டுக்குள் கார்பன் இல்லாத நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.
மேன்மையானவர்களே,
சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் குறித்தும் பொறுப்புகள் குறித்தும் இந்திய மக்கள் அறிந்து வைத்துள்ளனர் என்பதை நான் பெருமையாக கூறமுடியும்.
******
(Release ID: 1925886)
SRI/IR/KPG/KRS
(Release ID: 1926624)
Visitor Counter : 140
Read this release in:
English
,
Marathi
,
Hindi
,
Gujarati
,
Kannada
,
Urdu
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam