பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கொரியா குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 20 MAY 2023 12:06PM by PIB Chennai

ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே கொரிய குடியரசு அதிபர் மாண்புமிகு திரு யூன் சுக் யோலை பிரதமர் திரு நரேந்திர மோடி மே 20, 2023 அன்று சந்தித்துப் பேசினார்.

 

இந்தியாவிற்கும் கொரிய குடியரசுக்கும் இடையேயான சிறப்பு கேந்திர கூட்டுமுயற்சியின் முன்னேற்றத்தை தலைவர்கள் ஆய்வு செய்ததோடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, உயர் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் உற்பத்தி, பாதுகாப்பு, குறைக்கடத்திகள் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் ஆலோசித்தார்கள்.

 

இரண்டு நாடுகளின் தூதரக உறவின் பொன் விழா இந்த ஆண்டு கொண்டாடப்படவிருப்பதை அவர்கள் குறிப்பிட்டதோடு, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஆர்வம் தெரிவித்தனர்.

 

பிரதமர் தலைமையிலான ஜி20 அமைப்பிற்கு அதிபர் திரு யூன் சுக் யோல் பாராட்டையும் தமது ஆதரவையும் தெரிவித்தார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கான அதிபர் திரு யூனின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

 

இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கொரிய குடியரசு நாட்டின் இந்தோ-பசிபிக் உத்திக்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார்.

 

பிராந்திய வளர்ச்சி குறித்தும் தலைவர்கள் நேர்மறையான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

 

***

AD/RB/DL


(Release ID: 1925812) Visitor Counter : 166