மத்திய அமைச்சரவை

தகவல் தொழில்நுட்ப வன்பொருள் நிறுவனங்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம்- 2.0-வுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 17 MAY 2023 3:58PM by PIB Chennai

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.17,000 கோடி மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப வன்பொருள் நிறுவனங்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம்- 2.0-வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

 இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி கடந்த 8 ஆண்டுகளில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 105 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.9 லட்சம் கோடி) அளவிற்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

உலகில் மொபைல் ஃபோன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது மிகப்பெரிய நாடாக உள்ளது. நடப்பு ஆண்டு 11 பில்லியன்  அமெரிக்க டாலர் (சுமார் ரூ.90 ஆயிரம் கோடி) மதிப்பிலான மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச மின்னணுப்  பொருட்கள் உற்பத்திச் சூழல் இந்தியாவை நோக்கி வருவதை அடுத்து, இந்தியா மிகப்பெரிய மின்னணுப் பொருட்கள் உற்பத்தி நாடாக உருவெடுத்து வருகிறது.

 இத்திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு  வரையறுக்கப்பட்டது.  3.35 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தியை அதிகரிக்கும் என்றும், 2430 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு அதிகரிக்கும் என்றும், 75,000 நேரடி வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1924766

 

******

AP/IR/AG/KRS



(Release ID: 1924807) Visitor Counter : 229