பிரதமர் அலுவலகம்
தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் ஜன சக்தி கலைக் கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்
கண்காட்சியின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்
Posted On:
14 MAY 2023 2:41PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தில்லியில் உள்ள தேசிய நவீனக் கலைக்கூடத்தில் ஜன சக்தி கலைக் கண்காட்சியை பார்வையிட்டார். மனதின் குரல் அத்தியாயங்களில் உள்ள சில கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட அற்புதமான கலைப் படைப்புகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“தில்லி தேசிய நவீனக் கலைக்கூடத்தில் ஜன சக்தி கண்காட்சியைப் பார்வையிட்டேன். மனதின் குரல் அத்தியாயத்தில் உள்ள சில கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட அற்புதமான கலைப் படைப்புகளின் கண்காட்சி இது. தங்கள் படைப்பாற்றலால் கண்காட்சியை செழுமைப்படுத்திய அனைத்து கலைஞர்களையும் பாராட்டுகிறேன்.
"தில்லியில் உள்ள தேசிய நவீனக் கலைக்கூடத்தில், ஜன சக்தி கண்காட்சியின் மேலும் சில காட்சிகள் இங்கே உள்ளன."
***
AD/PKV/DL
(Release ID: 1924040)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam