பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தண்டேவாடாவில் சத்திஷ்கர் காவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்

Posted On: 26 APR 2023 5:03PM by PIB Chennai

சத்திஷ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் அம்மாநில காவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்தத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தண்டேவாடாவில் சத்திஷ்கர் காவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சல்மிக்க காவலர்களுக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். இவர்களது தியாகம் எப்போதும் நினைவு கூறப்படும். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்." 

***

(Release ID: 1919871)

AD/ES/RJ/RR


(Release ID: 1919917) Visitor Counter : 177