பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிக்கிமில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 04 APR 2023 6:41PM by PIB Chennai

சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

----

 

AP/CR/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1913662) வருகையாளர் எண்ணிக்கை : 171