சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
இந்த ஆண்டு பெருமளவில் மெஹரமில்லாமல் பெண் ஹஜ் பயணிகள் செல்லவுள்ளனர்
Posted On:
03 APR 2023 4:44PM by PIB Chennai
இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு ஹஜ்ஜை மேலும் வசதியாகவும், சுலபமாகவும் மேற்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பம் அளிக்கும் முறை மற்றும் யாத்ரீகர்கள் தேர்வு முறை ஆகியவை இணையதளம் வாயிலாக நடைபெற்றது. மொத்தம் 1.84 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 14,935 ஹஜ் விண்ணப்பதாரர்களுக்கு பயண ஒதுக்கீடு உறுதி அளிக்கப்பட்டது. (70-க்கும் மேறபட்ட வயதினர்கள் 10,621 பேருக்கும் மெஹரமில்லாமல் 4,314 பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது).
இதுவே ஆண் துணையில்லாமல் பெரும் எண்ணிக்கையில் செல்லக் கூடிய பெண்கள் எண்ணிக்கை அளவாகும். தேர்வு முடிவடைந்த பிறகு உடனடியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் காத்திருப்பவர்கள் பட்டியலில் உள்ளவர்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட 1.4 லட்சம் யாத்ரீகர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டது. அதே போல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
------
AP/IR/KPG
(Release ID: 1913393)
Visitor Counter : 174