பிரதமர் அலுவலகம்
இதுவரை இல்லாத அளவுக்கு எச்ஏஎல் நிறுவனம் அதிக வருவாய் ஈட்டியதற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
01 APR 2023 9:21AM by PIB Chennai
இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாய் ஈட்டியதற்காக எச்ஏஎல் நிறுவனத்திற்கும், அதன் குழுவினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் ரூ.24,620 கோடியாக இருந்த வருவாய், 2022-23 நிதியாண்டில் சுமார் ரூ.26,500 கோடியாக (தற்காலிக மற்றும் தணிக்கை செய்யப்படாத) அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் 8% வருவாய் வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான எச்ஏஎல் நிறுவனத்தின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
‘’ அற்புதமான சாதனை! எச்ஏஎல் நிறுவனத்தின் முழு குழுவின் அருமையான ஆர்வத்தையும், செயல்பாட்டையும் நான் பாராட்டுகிறேன்."
**********
AD/PKV/DL
(Release ID: 1912780)
Visitor Counter : 177
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam