பிரதமர் அலுவலகம்

இந்திய ராணுவத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை மற்றும் 12 சுவாதி என்ற ஆயுதங்களைக் கண்டறியும் ரேடார்கள் (சமவெளி) ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக ரூ. 9100 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து

தற்சார்பு நிலையை ஊக்குவிக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு உதவிகரமாக இருக்கும் என்று பிரதமர் கருத்து தெரிவிப்பு

Posted On: 31 MAR 2023 9:14AM by PIB Chennai

இந்திய ராணுவத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை மற்றும் 12 சுவாதி என்ற ஆயுதங்களைக் கண்டறியும் ரேடார்கள் (சமவெளி)  ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக ரூ. 9100 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் மார்ச் 30, 2023 அன்று கையெழுத்திட்டு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தின் ட்விட்டர் பதிவு தெரிவித்தது.

இந்திய பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியதாவது:

“தற்சார்பு நிலையை ஊக்குவிக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு உதவிகரமாக இருக்கும்.”

***

(Release ID: 1912404)

AD/BR/RR(Release ID: 1912467) Visitor Counter : 128