நிதி அமைச்சகம்
பான் -ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு
Posted On:
28 MAR 2023 2:48PM by PIB Chennai
வரி செலுத்துபவர்களின் வசதியை கருத்தில் கொண்டு பான் -ஆதார் இணைப்புக்கான காலக்கெடு, 2023- ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்கப்படாத ஆதார் அட்டைத்தாரர்களுக்கு இது தொடர்பான விவரங்கள் தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும்.
வருமானவரி சட்டம் 1961-ன் படி ஒவ்வொரு நபருக்கும் பான் எண் ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் பான் எண் வழங்கும் பணி தொடங்கியது. அவ்வாறு பான் எண் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டையை பெற தகுதிப்பெற்றவர்கள் ஆவர். 2023-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ, பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
அவ்வாறு பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்காதவர்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இணைப்பு செய்ய முன்வரும் பட்சத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஜூலை 1-ம் தேதி முதல் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பான் எண் செயலற்றதாக மாற்றப்படும். அவ்வாறு பான் எண் செயலற்றதாக மாறிவிடும் பட்சத்தில், இந்த பான் எண் அடிப்படையில், வருமானவரித் தாக்கல் செலுத்தி டிடிஎஸ் பெறுவோருக்கு அந்தத் தொகை திருப்பி செலுத்தப்பட மாட்டாது. பான் எண் செயல்படும் விதத்தில் மாற்றப்படும் வரை டிடிஎஸ்-க்கான வட்டித்தொகையும் வழங்கப்படாது. ஆனால் அதே நேரத்தில் வருமான வரி விதிகளின்படி, டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
ரூ.1000 கட்டணம் செலுத்தி பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த 30 நாட்களுக்கு பின்பே அவர்களது பான் அட்டை செயல்பட துவங்கும்.
இதுவரை 51 ஆயிரம் கோடி பான் அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பை மேற்கொள்ள விரும்புவோர் பின்வரும் லிங்க்-கை பயன்படுத்திக்கொள்ளவும்.
https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar .
***
AD/ES/RS/KRS
(Release ID: 1911545)
Visitor Counter : 1386