பிரதமர் அலுவலகம்

ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூர் அவர்களின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை

Posted On: 19 MAR 2023 7:33PM by PIB Chennai

ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூர் அவர்களின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது;

“ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். சமூகத்திலிருந்து ஏற்றத்தாழ்வுகளை அறவே நீக்குவதில் முக்கியப் பங்காற்றியதுடன், சமூகத்தினரிடையே மத நல்லிணக்கத்தையும் விதைத்த ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூரின் சேவை பாராட்டதலுக்குரியது. சமூக நீதியை நிலைநாட்டியதுடன், மக்களிடையே கல்வியை புகுத்துவதற்கும் தொடர்ந்து பணியாற்றியவர் ஆவார். அவரது கொள்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம்”.

-நரேந்திர மோடி (@narendramodi) மார்ச் 19, 2023

***

 

(Release ID: 1908572)

SRI/ES/RR/KRS(Release ID: 1908690) Visitor Counter : 125