பிரதமர் அலுவலகம்
பிரதமர், உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவ்சியில் குளிர்பதனக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 MAR 2023 8:02PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவ்சியில் உள்ள குளிர்பதனக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள் குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
"உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவ்சியில் உள்ள குளிர்பதனக் கிடங்கில் ஏற்பட்ட விபத்து துயரமானது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் - பிரதமர்"
----
AD/KJ/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1908321)
வருகையாளர் எண்ணிக்கை : 201
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam