பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

99வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச வேண்டிய அம்சங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்ளவும், ஊக்கமளிக்கும் முயற்சிகளை முன்னிலைப்படுத்தவும் நாட்டு மக்களைப் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

प्रविष्टि तिथि: 17 MAR 2023 8:14PM by PIB Chennai

99-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துகளைப் பதிவு செய்ய, MyGov அல்லது NaMo App அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சமூக மாற்றங்களைக் கொண்டுவரும் ஊக்கமளிக்கும் முயற்சிகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சி வரும் மார்ச் 26, 2023 அன்று ஒலிபரப்பாகும்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,

"26 ஆம் தேதி, மனதின் குரலின் 99வது நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பலர் தங்கள் கருத்துக்களையும் சமூக மாற்றங்களைக் கொண்டு வரும் ஊக்கமளிக்கும் முயற்சிகளையும் பகிர்ந்து வருகின்றனர். உங்கள் கருத்துகளை MyGov அல்லது NaMo App இல் தொடர்ந்து பகிரலாம். கருத்துகளைப் பதிவு செய்ய 1800-11-7800 என்ற எண்ணுக்கு அழையுங்கள்."

------

AD/KJ/KPG


(रिलीज़ आईडी: 1908309) आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Kannada , Telugu , Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Odia , Malayalam