பிரதமர் அலுவலகம்
பணியிடங்களிலும் யோகா பயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்த வழி: பிரதமர்
प्रविष्टि तिथि:
15 MAR 2023 8:43PM by PIB Chennai
பரபரப்பான பணிகள் மற்றும் மாறிவரும் வாழ்க்கைசூழல் சார்ந்த சவால்களை பிரதிபலிக்கும் வகையில் பணியிடங்களில் இடைவெளிகளின் போதும் யோகா பயிற்சி மேற்கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி ஊக்குவித்துள்ளார்.
யோகாவில் பெருவாரியான மக்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக, “ஒய்-பிரேக்”(Y-Break) இடைவெளியின் போது யோகா செய்ய குறிப்பாக பெருநிறுவன பணியிடங்களில் பணிபுரிபவர்களும், தன்னையே மறந்து பணியில் மூழ்குவோர் பின்பற்றுவதற்கான யோகா குறித்த ஒரு நிமிட காணொளியை வெளியிட்ட ஆயுஷ் அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவை மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் பகிர்ந்திருந்தார். அதற்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“பரபரப்பான பணிகள் மற்றும் மாறிவரும் வாழ்க்கைசூழல், ஆகியவற்றால் புதிய சவால்கள் ஏற்படுகின்றன. பணியிடங்களிலும் யோகா பயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்த வழி.”
***
(रिलीज़ आईडी: 1907471)
आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam