பிரதமர் அலுவலகம்
ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டான் ஃபாரெல் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய கதையை ட்வீட் செய்த பிரதமர்
प्रविष्टि तिथि:
12 MAR 2023 3:10PM by PIB Chennai
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான வளமான கலாச்சார தொடர்பு பற்றி பிரதமர் திரு.நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமருடனான மதிய உணவின் போது, ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டான் ஃபாரெல் பகிர்ந்த அனுபவம் குறித்து பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எனது நண்பர் ஆஸ்திரேலிய பிரதமர் @AlboMP உடனான மதிய உணவின் போது, ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா அமைச்சர் டான் ஃபாரெல் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் முதல் வகுப்பு படிக்கும்போது திருமதி எபர்ட் என்பவர் அவருக்கு வகுப்பெடுத்துள்ளார். அவர் டான் ஃபாரெலின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
திருமதி எபர்ட், அவரது கணவர் மற்றும் அவரது மகள் லியோனி, 1950-களில் இந்தியாவில் உள்ள கோவாவிலிருந்து அடிலெய்டுக்கு இடம்பெயர்ந்து, ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள ஒரு பள்ளியில் பாடம் கற்பிக்கத் தொடங்கினார். எபர்ட்டின் மகள் லியோனி தெற்கு ஆஸ்திரேலிய ஆசிரியர் கழகத்தின் தலைவராக இருந்தார்.
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உள்ள வளமான கலாச்சார தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்தக் கதையை நான் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். யாரோ ஒருவர் தனது ஆசிரியரை அன்புடன் குறிப்பிடுவதைக் கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
***
SRI/CR/DL
(रिलीज़ आईडी: 1906152)
आगंतुक पटल : 206
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam