பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

“மகளிருக்குப் பொருளாதார அதிகாரமளித்தல்” குறித்த மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நாளை உரையாற்ற உள்ளார்

Posted On: 09 MAR 2023 2:58PM by PIB Chennai

மகளிருக்குப் பொருளாதார அதிகாரமளித்தல் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு உரையாற்றவுள்ளார்.  இந்த இணையவழிக் கருத்தரங்கிற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு நல அமைச்சகமும், ஊரக வளர்ச்சி அமைச்சகமும் ஏற்பாடு செய்துள்ளன.  மகளிருக்கு சொந்தமான மற்றும் தலைமையேற்று நடத்தும் தொழில்நிறுவனங்களின் நீடித்த வளர்ச்சிக்கான வழிவகைகள், அறிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்துவதற்கான முறைகளைக் கண்டறியும் நோக்கில் அரசின் இந்தப் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக இது உள்ளது.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி, இணை அமைச்சர்கள் திரு கிரிராஜ் சிங், திரு மகேந்திரபாய் முஞ்பாரா, பொது மற்றும் தனியார் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் தொடக்க அமர்வில் கலந்துகொள்ள உள்ளனர். அதைத் தொடர்ந்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலாளர், பட்ஜெட் அமலாக்கம் குறித்த உத்திகளை இணையவழிக் கருத்தரங்கில் குறிப்பிட உள்ளார்.

அதைத் தொடர்ந்து சுயஉதவிக்குழுக்களை பெரிய வர்த்தக நிறுவனங்களாக மாற்றுவதற்கான வழிவகைகள், தொழில்நுட்பம் மற்றும் நிதியைப் பயன்படுத்துல், சந்தைகள் மற்றும் வர்த்தக விரிவாக்கம் ஆகியவைக் குறித்து துறை சார்ந்த நிபுணர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக் கூட்டமைப்பு மற்றும் இதர பங்கேற்பாளர்களால்   விரிவாக விவாதிக்கப்படுகிறது. இக்கருத்தரங்கில் செயல்முறை மற்றும் அமல்படுத்தப்படக் கூடிய தீர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இணையவழிக் கருத்தரங்கில் மதிப்பீட்டாளர்கள், துறை சார்ந்த நிபுணர்கள், பேச்சாளர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இது இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.  அரசு பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்புகள், பொது மற்றும் தனியார்துறை வங்கிகளின் பிரதிநிதிகள், வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள், மக்கள் சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு உறுப்பினர்கள், மாநில ஊரக வாழ்வாதார இயக்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.

மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் உரை மகளிருக்குப் பொருளாதார அதிகாரமளித்தல் தொடர்பானதாகும். 81 லட்சம் சுயஉதவி குழுக்களைத் திரட்டுவதில் தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்  பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வெற்றி, பெரிய உற்பத்தி நிறுவனங்கள் அல்லது கூட்டாண்மையை உருவாக்குவதன் மூலம் மூலப்பொருட்கள் வழங்குவதில் தகுந்த தலையீடுகள் மூலம் பொருளாதார அதிகாரமளித்தலின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அவர்களின் தயாரிப்புகளின் வடிவமைப்பு, தரம், அடையாளப்படுத்துல் மற்றும் சந்தைப்படுத்துதல், பெரிய நுகர்வோர் சந்தைகளுக்கு சேவை செய்வதற்காக தொழில்ரீதியாக நிர்வகிக்கப்படும் வகையில், அவர்களின் செயல்பாடுகளை அளவீடு செய்தல் மற்றும் அவற்றில் சிலவற்றை 'யூனிகார்ன்'களாக மாற்றச் செய்தல்.

இந்த அமர்வுகளைத் தொடர்ந்து ஒரு நிறைவு அமர்வு நடைபெறும், இந்த அமர்வுகளில் ஒவ்வொன்றிலும் மதிப்பீட்டாளர்களின் விளக்கக்காட்சிகள், துறை சார்ந்த அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் விளக்கங்கள் இடம்பெறும்.  அதைத் தொடர்ந்து திறந்தவெளி அமர்வு விவாதம் நடைபெறும்.

***

AP/IR/RJ/KPG


(Release ID: 1905358) Visitor Counter : 195