சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி' என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் மார்ச் 06, 2023 அன்று பிரதமர் உரையாற்றுகிறார்


மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்படும் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகளின் ஒரு பகுதியாக நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கான நுட்பம் மற்றும் யோசனைகளை இந்தக் கருத்தரங்கம் வழங்கும்.

இணையவழிக் கருத்தரங்கம் ஒரே நேரத்தில் 3 தொடர் அமர்வுகளை உள்ளடக்கியதாகும். இதில் நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள புதிய செவிலியர் கல்லூரிகள், ICMR ஆய்வகங்களின் பொது மற்றும் தனியார் துறைப் பயன்பாடு, மருத்துவ சாதனங்களுக்கான மருந்தகக் கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவம் தொடர்பான பல்துறை படிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்

Posted On: 05 MAR 2023 10:11AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மார்ச் 06 ஆம் தேதி காலை 10 மணி அளவில் காணொலி மூலம் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் 'சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

2023-24மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏழு அம்சங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கூறப்பட்டுள்ளன. அவை ஒன்றையொன்று பூர்த்தி செய்து கொள்ளக்கூடியவை. இவை அமிர்த காலத்தில் வழிகாட்டும் 'சப்தரிஷி'யாகச் செயல்படுகின்றன. 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுதல், ICMR ஆய்வகங்களில் பொது மற்றும் தனியார் மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவித்தல் மருத்துவ சாதனங்களுக்கான மருந்தகக் கண்டுபிடிப்புகள் என்பதோடு மருத்துவம் சார்ந்த பல்துறை படிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி என்பது அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும்.

 

இதில், துறைகளின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் தவிர மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் துறைகள் துறை வல்லுநர்கள் தொழில்கள்/சங்கங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள்/மருத்துவமனைகள்/நிறுவனங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு நிதிநிலை அறிக்கையில் குறைபாடுள்ளவற்றை நிறைவேற்ற ஆலோசனைகளை  வழங்குவார்கள்.

 

***

AP/CJL/DL


(Release ID: 1904358) Visitor Counter : 184